பீகார் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தள முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சக்தி மாலிக் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்
அவர் இன்று காலை தனது வீட்டில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் அவரது கையிலும் துப்பாக்கி இருந்ததுமாலிக்கின் அருகில் வந்ததும் அவர்கள் சரமாரியாக அவரை சுட்டனர். அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இறந்தார்.அடுத்த நிமிடமே அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.மாலிக் மனைவி குஷ்பூ தேவி கூறினார்.வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சக்தி மாலிக் போட்டியிட திட்டமிட்டிருந்தார்.
அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில்தான் அவர் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு அரசியலில் பலத்த எதிர்ப்பு இருந்தது என்றும் அரசியல் காரணமாக பலர் விரோதிகளாக இருந்தனர் என்றும் சக்தி மாலிக்கின் மனைவி குஷ்பூ தேவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சக்தி மாலிக் அவரது வீட்டிலேயே சுடப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் அவர்களுக்கு முன் குவிந்தனர். அப்பகுதிஉதவி போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் பாண்டேஅவரது வீட்டுக்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.