ஐபிஎல்-க்கு இது புதுசுங்கோ...!
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த சீசன் முதல் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஐபிஎல் தொடரின் 10-வது சீசன் வரை டிஆர்எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், பிசிசிஐ நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை.
இன்னும் சொல்லப் போனால், சர்வதேச கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தை கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலையில், பிசிசிஐ 2016-ம் ஆண்டுக்குப் பிறகே அதற்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், முதன்முறையாக அந்தத் தொழில்நுட்பம் ஐபிஎல் போட்டிகளில் பயன்படுத்தப்படப் போகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது சீசனில், நடுவர்கள் செய்த பல பிழைகளுக்குப் பின்னர், டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை, பிசிசிஐ கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com