பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது.
பீகார் சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய 3 தேதிகளில் தேர்தல் நட க்க உள்ளது. இதனால் பீகார் அரசியலில் இப்போ தே பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டது.இந்தச் சூழ்நிலையில் அம்மாநிலத்தில் தனித்தே ஆட்சியைப் பிடிக்க ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருந்து லோக் ஜனசக்தி கட்சி வெளியேறி பீகார் சட்டமன்றத் தேர்தலை தனித்தே சந்திக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியுடன் லோக் ஜனசக்தி கட்சிக்கு நெருக்கமான உறவு உள்ளது. ஆனால் மாநில அளவில் ஐக்கிய ஜனதா தளத்துடன் லோக் ஜனசக்தி கட்சி பல கொள்கை ரீதியான அடிப்படை வேறுபாடுகள் உள்ளன.
அதனால் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தனித்துப் போட்டியிட கட்சியின் நாடாளுமன்ற போர்டு முடிவு செய்தது.தனித்து போட்டியிடுவதன் காரணமாக பாரதிய ஜனதாக் கட்சியுடன் உள்ள உறவு எந்த வகையிலும் பாதிக்காது என்றும் சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை எதிர்த்து தங்கள் கட்சி போட்டியிடாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு லோக் ஜன சக்தி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கூட்டணியில் தொடர்ந்து பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார் .லோக் ஜன சக்தி கட்சி நாடாளுமன்ற போர்டு கூட்டம் புது டில்லியில் நேற்று நடந்தது. பீகார் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.
கட்சியின் இந்த முடிவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சி மூத்த தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில் கட்சித் தலைவர் என்ற வகையில் சிராக் பாஸ்வானுக்கு கூட்டணி குறித்து முடிவு செய்ததற்கு எல்லா உரிமை மற்றும் அதிகாரமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்