ஹத்ராஸ் கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய பிரியங்கா காந்தி கோரிக்கை.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்ட கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.

உ. பியின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பூலா ஹர்கி கிராமத்தில் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வயல்வெளியில் புல் அறுக்கச் சென்ற இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று உடலை எரித்துவிட்டார்கள். அந்தப் பெண்ணின் பெற்றோரை இறுதிச்சடங்குகள் செய்யவும் அனுமதிக்கவில்லை.டெல்லியிலிருந்து அந்த பெண்ணின் குடும்பத்தின ரை சந்திக்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவரது தங்கை உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்காவும் நொய்டாவில் கைது செய்யப்பட்டனர்.அடுத்த நாள் அவர்கள் மீண்டும் அந்த பெண்ணின் பெற்றோரை சந்திக்க வந்தபோது போலீசார் தடை செய்யவில்லை.

இந்த சந்திப்பிற்கு பின்னர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில் , இறந்த பெண்ணின் குடும்பத்தாரை மாவட்ட கலெக்டர் கடுமையாக மிரட்டி உள்ளார். தன்னை காப் பாற்றிக் கொள்வதற்காக அந்த கலெக்டர் தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரை உடனடியாக சஸ்பென்ட் செய்ய வேண்டும். அவரது செயல்முறைகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும்.உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் நீதி விசாரணை வேண்டும் என்று கேட்கின்றனர். ஆனால் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக உத்தரப்பிரதேச அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது எனத் தெரியவில்லை.உத்தரப்பிரதேச அரசு தனது தூக்கத்திலிருந்து விழித்து கொண்டிருப்பது உண்மையானால்,அப்பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

More News >>