ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும் ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியதாக வர்த்தகர்களின் கூட்டமைப்பு தகவல்

கொரோனா வைரஸ் கொடூரமானது. எளிதில் மற்றவர்களுக்கு பரவும். ஒரு பொருளை தொடுவதான் மூலம் கொரோனா பரவும் அபாயாம் இருப்பதால்தான் கையுறை அணிந்து செல்ல வேண்டும் என டாக்டர்கள் வழியுறுத்துகின்றனர். இந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும் என்று முதலில் சொல்லப்பட்டது. அப் படியெல்லாம் இல்லை என்று சில அமைப்புகள் அதற்கு எதிர்வாதம் செய்தாகது. இருப்பினும் மக்கள் யாருமே அதை லட்சியம் செய்யவில்லை. வழக்கம் போல ரூபாய் நோட்டுகளை புழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும் என்று என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியதாக அகில இந்தியா வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா இல்லையா என்ற குழப்பம் பெரும்பாலானா மக்களுக்கு இருந்ததால் அதை தெளிவுபடுத்தக் கோரி கடந்த மார்ச் 9ம் தேதி அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியது.

பின்னர் இந்த கடிதம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் உள்ளிட்டவை பரவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.எனவே , கரன்ஸிக பயன்பாட்டை தவிர்க்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தமது அறிக்கையில் இந்த விபரத்தை குறிப்பிட்டுள்ளது.

More News >>