ரயில் நிலைய உணவகங்களில் உணவை தயாரித்து விற்க ஐ.ஆர்.சி.டி.சி. அனுமதி.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் செயல்பட்டுவரும் உணவகங்களில் உணவை தயாரித்து விற்க ஐ.ஆர்.சி.டி.சி. அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படிப்படியான தரவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன தற்போதைய தளர்வின் அளவின் அடிப்படையில் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரயில் நிலையங்களில் உள்ள உணவக ங்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் திறக்கப்பட்டன. எனினும் அங்கு உணவு தயாரிக்க அனுமதி அளிக்கப்படவில்லை வெளியிலிருந்து உணவு தயாரித்து முன்பே பேக் செய்யப்பட்ட உணவு வகைகளை மட்டுமே விற்க அனுமதி வழங்கப்பட்டது.இதனிடையே 6 மாதங்களுக்கு பின் தற்போது ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்களிலே யே உணவை தயாரித்து பேக் செய்து விற்க இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி). அனுமதி அளித்துள்ளது. ஆனால் பயணிகள் எவரும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் உணவகம் நடத்த மார்ச் 23ம் தேதிக்கு பிறகு ஒப்பந்தம் முடிவடைந்த உணவகங்களும் 20 சதவீத உரிமக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 31 வரை ஒப்பந்தத்தை நீட்டித்தது செயல்படலாம் எனவும் ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதையொட்டியும் வரும் அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ள நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.