ஜேம்ஸ் பாண்ட் படத்தை துரத்தும் கொரோனா வைரஸ்.. பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் நிறைந்திருக்கின்றனர். அதைவிட அப்பா டக்கர் படமெல்லாம் தற்போதுள்ள நவீன டிஜிட்டல் கால கட்டத்தில் வெளிவந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் கோடையை யாரும் தகர்க்க முடியவில்லை. 1960 களில் தொடங்கி இதுவரை மொத்தமே 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள்தான் வந்துள்ளன.
தற்போது 25-வது ஜேம்ஸ் பாண்ட் படம் உருவாகி இருக்கிறது. நோ டைம் டூ டை என்ற பெயரில் உருவாகி இருக்கும் இப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறார். ஏற்கனவே 4 முறை ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கும் இவர் மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டு விலகினார். ஆனாலும் அவரிடம் சமாதானம் பேசி இப்படத்தில் பட நிறுவன நடிக்க வைத்திருக்கிறது. இது டேனியல் கிரெய்க் நடிக்கும் ஐந்தாவது மற்றும் அவர் நடிப்பில் வரும் கடைசி படம். இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்று பகிரங்கமாக டேனியல் கிரெய்க் அறிவித்துவிட்டார்.படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நோ டைம் டு ட்டை படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் ஜேம்ஸ் பாண்ட் படத்தையும் துரத்தியது. இதையடுத்த சமீபத்தில் லண்டனில் நவம்பர் 12-ந்தேதியும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் நவம்பர் 25-ந்தேதியும் வெளியாகும் என தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா வைரஸ் இன்னும் ஒயந்த பாடில்லை மீண்டும் வேகமாக பரவும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் பல நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்படாமல் நிலை நீடிக்கிறது. இதையடுத்து மீண்டும் ரிலீஸ் தல்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி நோ டைம் டு டை படம் ரிலீசாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.