கம்பம் அருகே அனுமதியின்றி கிடா சண்டை
தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி கிடா சண்டை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் பிராணிகளை வைத்து நடக்கும் விளையாட்டுக்கள் வீர விளையாட்டுக்களை நடத்த சில ஆண்டுகளாக அரசு அனுமதிக்கவில்லை.ரம் போராட்டத்திற்கு பிறகு காளைகளை வைத்து நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்தது அதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டும், ரேக்ளா ரேசும் மீண்டும் நடத்தப்படுகிறது.இவை தவிர ரேக்ளா ரேஸ், கிடாச்சண்டை, சேவல் சண்டை போன்றவைகளை நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை .ஆனால் கிராமங்களில் ஓசைப்படாமல் இந்த ரகவிளையாட்டுக்கள் நடத்தப்பட்டு தான் வருகிறது. அதிலும் குறிப்பாக கிடாமுட்டு எனப்படும் கிடாச்சண்டை ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. கிடாமுட்டு பிரியர்கள் போலீசுக்கு தெரியாமல் இதை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம்- கம்பம்மெட்டு ரோடு பகுதியில் ஒரு தனியார் நிலத்தில் கிடா சண்டை நடத்தப்பட்டது.இந்த சண்டையை காண ஏராளமானோர் அங்கு கூடினர். கிடாமுட்டு நடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் வருவதை கண்ட போட்டியாளர்கள், ஆட்டுக்கிடாக்களுடன் வந்திருந்தவர்கள் ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி அந்த இடத்தைவிட்டு விரைந்து சென்று தப்பிவிட்டனர். போலீசார் அப்பகுதியிலிருந்து கூட்டத்தை விரட்டி அடித்தனர்.