காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு : மத்திய ரிசர்வ் போலீசார் இருவர் பலி.
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு மத்திய ரிசர்வ் படை போலீசார் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரில் பாம்போரே என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை படையினர் ஒரு குழுவாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது சரமாரியாக சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 2 ரிசர்வ் படை போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் மூவர் காயமடைந்தனர் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.சம்பவம் நடந்த இடம் நகரின் மையப்பகுதி என்பதால் துப்பாக்கி சூடு நடந்த பின்னர் சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த பகுதியில் மேலும் போலீஸ் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.