`மெஸ்ஸியா..? ரொனால்டோவா..?- உசேன் போல்ட்டின் பன்ச் பதில்

உலக அளவில் கால்பந்துக்கு பெயர் போன இரண்டு விளையாட்டு வீரர்கள் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானா ரோனால்டோ.

இவர்களில் இருவரின் ரசிகர்களும் ரஜினி, கமல் ரசிகர்கள் போல இரு துருவங்கள். இந்நிலையில், இவர்கள் இருவரில் தனது விருப்பத்துக்கு உறியவர் யார் என்று மின்னல் வேக மனிதன் உசேன் போல்ட் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள போல்ட், `ரோனால்டோவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், மெஸ்ஸியுடன் ஒப்பிடுவதற்கு எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ரொனால்டோ உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரராக வருவதற்கு கடுமையாக உழைத்துள்ளார்.

பல்லாண்டு கால உழைப்பின் பிரதிபலனே அவர் இன்று இந்த நிலையில் இருக்கிறார். ஆனால், மெஸ்ஸிக்கு பிறந்ததிலிருந்தே இந்தத் திறமை இருக்கிறது என்று தோன்றுகிறது. அவரிடம் கால்பந்து விளையாடுவதற்கான திறனும் வேகமும் மிகச் சாதாரணமாக வந்துள்ளது.

எனக்கும் அதைப் போலத்தான். எனக்கும் வேகம் என்பது என்னுடனேயே பிறந்தது. எனவே, மெஸ்ஸியோடுதான் என்னை ஒப்பிட்டுக் கொள்ள முடிகிறது’ என்று இரு துருவ ரசிகர்களையும் சமாதானம் செய்யும் வகையில் லாவகமாக பதில் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>