கணவரின் கட் அவுட் அருகில் வைத்துக்கொண்டு வளைகாப்பு நடத்திக்கொண்ட தமிழ் நடிகை.. உருக்கம் கலந்த மகிழ்ச்சி விழா.
காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் கன்னட படங்களில் நடித்தபோது கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் காதல் மலர்ந்தது. இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பில் காலமானார். இது மேக்னாராஜுக்கும் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவனைருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சிரஞ்சீவி சார்ஜா இறக்கும் போது மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.
கணவரை இளவயதிலேயே அதுவும் தான் கர்ப்பமாக இருக்கும்போது பறிகொடுத்தது மேக்னாவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. அவருக்கு குடும்பத்தினர் சமாதானம் சொன்னார்கள். தனது கணவரை நினைத்து அவர் அடிக்கடி துக்கத்தில் ஆழ்வதுடன், எனது வயிற்றில் நீங்கள் பிள்ளையாக பிறப்பீர்கள், மீண்டும் உங்களைக் காண்பேன் என்று மெசேஜ் பகிர்கிறார். இது ரசிகர்களை உருக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. மேக்னா ராஜுக்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தினர். அதில் கணவர் இல்லாத குறையை தீர்க்க சிரஞ்சீவி சார்ஜாவின் கட் அவுட்டை தயார் செய்து அதை தன் அருகில் வைத்துக்கொண்டு வளைகாப்பில் பங்கேற்றார்.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்னா ராஜ் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.