பிரபல இயக்குனரை தலைவராக்கிய சின்னத்திரை சங்கத்தில் மோதல்..

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்குச் சமீபத்தில் இயக்குனர் நடிகர் மனோ பாலா தலைவராகச் செயற்குழுவில் தேர்வு செய்யப்பட்டதாகச் சங்கத்தின் பொதுச் செயாலாளர் ரிஷி கேசவன் அறிவித்தார். அதற்கு பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்த ரவிவர்மா என்பவரை நீக்கிவிட்டுத்தான், மனோபாலா தலைவராகச் செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டார். அது தற்போது மோதலாக வெடித்திருக்கிறது.

தலைவர் பதிவிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ரவிவர்மா தன்னை நீக்கியது செல்லாது இன்னும் நான்தான் தலைவராக தொடர்கிறேன் என்றார். இதுபற்றி ரவி வர்மா அளித்த பேட்டியில் கூறும் போது,சின்னத்திரை சங்கத்துக்கு நான் தான் தலைவராகத் தொடர்கிறேன். என்னை நீக்கியது செல்லாது. தலை வரை நீக்கும் அதிகாரம் சங்க விதிப்படி செயற்குழுவுக்கு கிடையாது. சங்கத்திலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து மனோபாலாவை தலைவராகத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

அது செல்லாது சங்கம் நேர்மையாக நடந்து வருகிறது. கொரோனா நிவாரண உதவி வழங்கியதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. என் மீது பொய் யாக புகார் கூறப்படுகிறது. சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷி கேசன் அறிவித்த அறிவிப்புக்களும் செல்லாது.இவ்வாறு ரவிவர்மா கூறினார். அவரது ஆதரவாளர்களும் ரவிவர்மா கூறியதை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.

More News >>