மனைவியுடன் கொஞ்ச முடியவில்லை தடையாக இருந்த 5 வயது மகனை தந்தை என்ன செய்தார் தெரியுமா?

மனைவியுடன் கொஞ்சுவதற்குத் தடையாக இருந்த 5 வயது மகனை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு மகனை யாரோ கடத்தி சென்றதாக வாலிபர் போலீசில் புகார் கூறி நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்தது. பீகாரைச் சேர்ந்த சாகேப் சவுத்ரி (28) என்ற வாலிபர் தனது மனைவி மற்றும் 5 வயது மகனுடன் சூரத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் கணவனும், மனைவியும் ஒன்றாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மகன் பிறந்த பின்னர் சவுத்ரியால் மனையிடம் அதிக நேரம் கொஞ்ச முடியவில்லை. இது அவருக்கு மன வேதனையைத் தந்தது.பெரும்பாலான சமயங்களில் அவரது மனைவி குழந்தையுடன் தான் நேரத்தைச் செலவழித்து வந்தார். வெளியே எங்காவது செல்ல வேண்டுமென்றால் குழந்தையையும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இது சவுத்ரிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

கொரோனா காலத்தில் வீட்டில் சும்மா இருந்த போதும் கூட மனைவியுடன் பொழுதுபோக்க மகன் தடையாக இருந்தான். இதையடுத்து மகனை எங்காவது கொண்டுபோய் விட்டுவிட்டால் மனைவியுடன் நீண்ட நேரம் கொஞ்சலாம் என சவுத்ரி கருதினார். இதற்காக அவர் ஒரு திட்டம் தீட்டினார். இதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன் மகனுடன் வெளியே சென்ற சவுத்ரி, 4 கிமீ தொலைவில் உள்ள பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு நைசாக வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்த விவரத்தை அவர் தனது மனைவியிடம் கூட கூறவில்லை. மாலையில் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்ற சவுத்ரி, தனது மகனை யாரோ கடத்தி சென்று விட்டதாகப் புகார் செய்தார். பதற்றமடைந்த போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதில் சவுத்ரி மீதே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது முன்னுக்குப் பின் முரணான தகவல்களில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து முறைப்படி விசாரித்தபோது சவுத்ரியின் திட்டம் அம்பலமானது. போலீசார் பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் அங்கிருந்தவர்கள் அந்த சிறுவனை மீட்டு அருகிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். பொய்யான புகார் கொடுத்ததின் பேரில் சவுத்ரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

More News >>