இன்றைய தங்கத்தின் விலை 06-10-2020
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான தங்கத்தின் விலை குறைந்தது.இதனால் தங்க முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர் . ஆனால் இரண்டாம் நாளான இன்று தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது இது முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குணமடைந்து திரும்பியது கூட விலை உயர்வுக்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4821 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் ஒரு கிராம் ரூ.24 விலை உயர்ந்து, ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4845 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -48458 கிராம் ( 1 சவரன் ) - 38760
தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5062 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.25 உயர்ந்து, கிராமானது ரூ.5087 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 50878 கிராம் - 40696
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 80 பைசா விலை உயர்ந்து, கிராம் 65.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 65200 க்கு விற்பனையாகிறது.