மகளைக் கடத்தி திருமணம் செய்தார் எம் எல் ஏ பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் அளித்த ஆட்கொணர்வு மனு நாளை விசாரணை.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தமது மகள் சௌந்தர்யாவை வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மகளை மீட்டுத் தருமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தியாகதுருகம் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சகர் சுவாமிநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் இந்த மனு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு நேற்று தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இத்திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெண்ணின் தந்தை சாமிநாதன் போலீசில் புகார் செய்தார் ஆனால் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதாலும் சௌந்தர்யா 18 வயதை கடந்தவர் என்பதாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து எம்எல்ஏ விடமிருந்து தனது மகளை மீட்டு தரவேண்டும் என்று சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் . இந்த மனு மீதான விசாரணையை நாளை நடத்துவதாக நீதிபதி தெரிவித்தார் ஆனால் சுவாமிநாதன் இன்றே என்று விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. நாளை விசாரணை நடக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது..முன்னதாக இதுகுறித்து எம்எல்ஏ பிரபு, நான் சௌந்தர்யாவை கடத்தி வந்து திருமணம் செய்து கொள்ளவில்லை.நாங்கள் இருவரும் காதலித்தோம். எனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்று வீடியோ மூலம் விளக்கம் அளித்திருந்தார்..