ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அந்த முக்கிய வீரர்கள் !

ஐபிஎல் 2020 லீக் சுற்றுகள் செப்டம்பர் மாதம் ஆரம்பித்து நடந்துவருகிறது. இந்நிலையில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான் புவனேஸ்வர் குமார் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா இருவரும் காயம் காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகுவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார், கடந்த 2 ம் தேதி சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். இதனால் அந்த போட்டியில் 19 ஓவரில் ஒரு பந்து மட்டுமே வீசிவிட்டு வெளியேறினார். எனவே இந்த அவதியில் இருந்து மீண்டு வர 6 முதல் 8 வாரங்கள் சிகிச்சை மற்றும் ஓய்வு தேவைப்படுவதால் அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார். இவர் பிசிசிஐக்கு ஒப்பந்தமாகி உள்ளதால் இவரின் சிகிச்சைக்கான செலவை பிசிசிஐ ஏற்றுக்கொள்கிறது.

அதுபோல் டெல்லி அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ராவும் மோதிர விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் மீதமுள்ள போட்டியிலிருந்து விலகுவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

More News >>