இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020 !

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்ட் ஜென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தில் சார்பியல் கோட்பாடுகளை மையமாக வைத்துக் கண்டறியப்பட்ட கருந்துளைகள் சார்பாக ஆய்வு நடத்தியதற்காக "ரோஜர் பென்ரோஸ்" இந்தாண்டிற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கிறார்.

இவர் இங்கிலாந்து நாட்டை சார்ந்தவர், அறிவியல் கோட்பாட்டாளர், கணிதவியலாளர் ஆவார்.ரெய்ன்ஹார்ட் ஜென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகிய இருவரும் விண்மீன்களின் மையத்தில் உள்ள துகள்களைச் சார்ந்த ஆய்வுகளை நடத்தியதற்காக இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை இம்மூவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

More News >>