`இப்படியா பிரச்னையைத் தீர்ப்பீங்க!- பா.ஜ.க-வை கலாய்த்த ராகுல்
`தற்போது தேசிய அளவில் நடந்து வரும் பிரச்னைகளை பா.ஜ.க, காங்கிரஸ் மீது அவதூறு பரப்பி மடை மாற்றியுள்ளது’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
மத்தியில் ஆட்சி புரியும் பா.ஜ.க மீது எதிர்க்கட்சிகள் ஏக கடுப்பில் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம், இந்திய அளவில் மூன்றாவது அணி என்று அடுத்தடுத்த காய் நகர்த்தள்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஈராக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கிய 39 இந்தியர்கள் மரணமான விஷயத்தை பா.ஜ.க அரசு வெளியில் சொல்லாமல் மறைத்தது பூதாகரமானது. இதையடுத்து, ஆதார் தகவல்கள் மீண்டும் திருட்டுப் போனது என்று தகவல் கசிந்தது பா.ஜ.க-வுக்கு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.
இதையொட்டி ராகுல், `39 இந்தியர்கள் இறந்ததை இந்த அரசு மறைத்தது. அது பொய் சொல்லியது வெளியே தெரிந்துவிட்டது. இதை சமாளிப்பதற்கு காங்கிரஸ் மீது அவதூற பரப்பியும் தகவல்கள் திருட்டுப் போய்விட்டதாகவும் வதந்தி பரப்பி வருகிறது பா.ஜ.க.
இதை ஊடகங்களும் நம்பிக் கொண்டு, 39 இந்தியர்கள் இறந்ததை மறந்துவிட்டு பா.ஜ.க-வின் சதிக்கு இரையாகிவிட்டன. பிரச்னை தீர்ந்தது’ என்று மத்தியில் ஆட்சி புரியும் பாரதிய ஜனதா கட்சியை கலாய்த்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com