பண்டிகைகள் மற்றும் விழாக் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன..? மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியீடு....!

வரும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நமது நாட்டில் மத வழிபாடுகள், கண்காட்சிகள், பேரணிகள், கலாச்சார ஊர்வலங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் நடைபெறும். இந்த நிகழ்வுகள் போது பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் பண்டிகை நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது.65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.விழாக்கள் நடத்தும் முன் அவசியம் முழுமையாகத் திட்டமிட வேண்டும். கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் சமூக இடைவெளி ஆகியன உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கட்டாயம் முக கவசங்களை அணி ய வேண்டும். நாடகம் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு முன்பே வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மேடை கலைஞர்களுக்கும் முழுமையாகப் பொருந்தும்.உடல் வெப்ப சோதனை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேவையான இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News >>