இது எய்ட்ஸ் பற்றிய படம் அல்ல - இணையதளவாசிகளுக்கு அருவி திரைப்படக்குழு வேண்டுகோள்
புதுமுக இயக்குநர் அருன் பிரபு புருஷோத்மன் இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.அர்.பிரபு மற்றும் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அருவி.
சமுக பிரச்சனைகளை மையப்படுத்தி உருவகியுள்ள இப்படத்தில் அதிதி பாலன், லக்ஷ்மி கோபல்சாமி, ஸ்வேதா சேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் கதைக்கருவு இது தான் எனக்கூறி சமூகவலைத்தளஙளில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பு குழு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
“அருவி திரைப்படம் எயிட்ஸ் பற்றியும் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை பற்றியும் பேசும் படம் என்ற செய்தி சமுகவலைதலங்களிளும் சில மீடியாக்களிலும் பரவி வருகிறது இது தவறான ஒன்றாகும்..
அருவி திரைப்படம் மனிதர்கள் பற்றியும் அன்பு பற்றியும் சமுகத்தை பற்றியும் மிக அழகாக கூறும் ஒரு திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் தயாரிப்பு நிறுவனத்தினிடமிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் அதுவரை யாரும் இந்த படத்தை பற்றி எந்த வித செய்திகளையும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறது” என்று கூறியுள்ளனர்.