அந்த ஒருவருக்கு மட்டும் எப்படி கொடுக்கலாம் - காய்ச்சி எடுக்கும் சித்தார்த்
டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், புதுப்படங்கள் ஏதும் ரிலீஸ் செய்யப்படவில்லை. தொடர்ந்து, படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனவும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவும் நடைப்பெறாது எனவும் கூறப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும், வேலைநிறுத்தம் காரணமாக வெளியாக உள்ள அனைத்து படங்களின் ரிலீசும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப பணிகளும் முடங்கியுள்ளது. இந்த வேலை நிறுத்ததிற்கு அனைத்து சங்கங்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிலரை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், “கொடூரமான சினிமா சந்தையில் ஒவ்வொரு படமும் சரிக்கு சமமான சவால்களை சந்தித்து தான் வெளியாகிறது. இந்நிலையில் சில படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்து படப்பிடிப்பு நடத்த அனுமதிப்பட்டுள்ளது.
அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இந்த சலுகையை வழங்குங்கள். நாம் அனைவரும் ஒன்று தான். ஆனால், இது சமத்துவம் மற்றும் ஒற்றுமை இல்லாததை காட்டுகிறது. கடவுள் நம்மை காப்பற்றட்டும்” என்று பொங்கி எழுந்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 62 வது படம் உட்பட மேலும் இரண்டு படங்களுக்கு மட்டும் ஓரிரு நாட்கள் படபிடிப்பு நடத்துவதற்கு தயாரிப்பாளர் சங்கம் சிறப்பு அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com