விஜய் சேதுபதி இயக்குனருக்கு திருமணமா? டிவிட்டர் மெசேஜால் ரசிகர்கள் திடீர் குழப்பம்..

இயக்குனர் சீனு ராமசாமி கிராமம் சார்ந்த வாழ்வியல், நடுத்தரவர்கத்தினரின் மாறுபட்ட கதைகளையும், உண்மை சம்பவங்களின் அடிபடையிலான படங்களையும் இயக்குவதில் திறமையானவர். நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமான தென்மேற்கு பருவக் காற்று படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. இப்படம் தேசிய விருது வென்றது. தர்மதுரை, நீர் பறவை, இடம் பொருள் ஏவல், மாமனிதன் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இதில் மாமனிதன் படப்பிடிப்பில் உள்ளது. இடம் பொருள் ஏவல் ரிலீஸ் தாமதமாகி வருகிறது.

சீனுராமசாமியின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று திடீரென்று சீனுராமசாமிக்கு திருமணம் நடந்தது என்ற ஒரு மெசேஜ் பதிவானது. சிறிது நேரத்தில் அது நீக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது சீனுராமசாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா, நேற்று நடந்ததா? என்று பலரும் பேசத் தொடங்கினர். இதுகுறித்து சீனு ராமசாமி இன்று டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறோம். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம் என தெரிவித்திருக்கிறார்.

சினிமா தியேட்டர்கள் வரும் 15ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு வழிகாட்டுதல்கள் அறிவித்துள்ளன. சீனு ராமசாமி வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டில் கூறும்போது.மனிதனுக்குள் இயற்கையாக இருக்கும் ஒன்று கூடுதல் (gathering) சேர்ந்து உழைத்தல் ஆகிய உள்ளுணர்வுகளின் வெளிப்பாடே திரையரங்கம். வெண் மையான வெள்ளித்திரை சினிமா வாழும். Bouquet சாமானிய மக்களை அரவணைத்து அது இயங்குமென நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

More News >>