3 முறை முதல்வர், 2 முறை பிரதமர் 20 வருடங்களாக விடுமுறை எடுக்காத மோடி

3 முறை முதல்வராகவும், 2வது முறை பிரதமராகவும் பதவி வகிக்கும் மோடி இன்றுடன் இந்த பதவிகளுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடங்களில் ஒரு நாள் கூட அவர் விடுமுறை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தான் முதன் முதலாகக் குஜராத் முதல்வராக மோடி பொறுப்பேற்றார்.

இதன் பின்னர் 2002, 2007 மற்றும் 2012 ஆகிய வருடங்களில் தொடர்ந்து குஜராத் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் முதல்வராக இருந்தபோது தான் 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். 5 வருடங்களுக்குப் பின் 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 2வது முறையாகப் பிரதமர் பதவிக்கு அவர் வந்தார்.

2001 முதல் தொடர்ந்து 3 முறை முதல்வராகவும், 2 முறை பிரதமராகவும் பதவியில் உள்ள மோடி இன்று தன்னுடைய பதவிக் காலத்தில் 20வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறார். இந்த 20 வருடங்களில் இவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். இதுகுறித்து பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு: முதல் மோடி அரசு நம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சித்தது.தற்போது ஆட்சியில் உள்ள 2வது மோடி அரசு 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட்டு விட்டது. 370வது பிரிவு நீக்கப்பட்டது சரித்திர சாதனையாக மாறியுள்ளது. ராமர் கோவில் உண்மையாகப் போகிறது. விவசாயிகளுக்கு இப்போது சுதந்திரம் கிடைத்து விட்டது. தற்போது விவசாய புரட்சி நடந்துள்ளது. தொழில், நிலக்கரி மாற்றங்கள், விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் எப்டிஐ மாற்றங்கள், வரி வசூலிப்பில் மாற்றங்கள் உள்படப் பல புதிய திட்டங்களுக்குத் தொடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வரும் வருடங்களில் பெரும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 20 வருடங்கள் பதவியில் இருந்து சாதனை படைத்துள்ள மோடிக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More News >>