கொரோனாவை பரப்பிய சீனாவுக்கு பதிலடி.. டிரம்ப் மீண்டும் காட்டம்..

அமெரிக்காவுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பிய சீனா நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இது வரை 3 கோடி 63 லட்சம் பேருக்கு இந்நோய்த் தொற்று பாதித்திருக்கிறது.

10 லட்சம் பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 77 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. அங்கு 2 லட்சத்து 16 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.இதற்கிடையே, சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். அதன்பின், சீன அதிபர் ஜின்பிங்குடன் பேசி, நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்தார்.

தற்போது டிரம்ப்புக்கும் கொரோனா பாதித்து சிகிச்சையில் குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்ட வீடியோ செய்தியில், கொரோனாவுக்கு எனக்கு என்ன சிகிச்சை கிடைத்ததோ அதை எல்லா அமெரிக்கர்களும் பெறுவார்கள். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அதை மக்களுக்கு இலவசமாகவே வழங்குவோம். நீங்கள் எந்த விலையும் தர வேண்டியதில்லை. கொரோனா பாதிப்பு உங்கள் தவறு இல்லை. அதற்குச் சீனாவே பொறுப்பு. அமெரிக்காவுக்கு இந்நோயைப் பரப்பியதற்கு, உலகம் முழுவதும் இந்நோயைப் பரப்பியதற்குச் சீனா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

More News >>