இரண்டாம் குத்து பட டீசரை பார்த்து இயக்குனரை விளாசும் நெட்டிஸன்கள்..
கோலிவுட்டில் அடிக்கடி படங்களின் டிரெண்டு மாறி வருகிறது. இது ஒவ்வொரு இடைவெளிக்கு பிறகும் மாறி வரும் டிரெண்டுக்கு ஏற்ப அதே பாணியில் படங்கள் வரிசையாக வரும் அது வரவேற்பும் பெறும் திகில் படம் டிரெண்டு ஓடிக்கொண்டிருந்த நிலையில் சந்தோஷ் பி ஜெயகுமார் இருட்டறையில் முரட்டு குத்து என்ற படத்தை 2 வருடத்துக்கு முன்பு இயக்கினார்.
பேய் படம் என்று பார்க்கச் சென்றவர்களுக்கு அது காமப் பேய் என்று தெரிந்ததும் ஷாக் ஆகினர். பெரிசுகளும், குடும்பங்களும் ஒதுங்கிக் கொள்ள இளவட்டங்கள் தியேட்டரை மொய்க்கத் தொடங்கினார்கள். இப்படத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். படத்தின் வசூலைப் பார்த்ததும் விமல், ஹரீஷ் கல்யாண் என சில நடிகர்கள் அடல்ட் படத்துக்கு வந்தனர்.
கவுதம் கார்த்திக் முதல் ஹரிஷ் கல்யாண் வரை எல்லோரும் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டது தான் மிச்சம். மற்ற இரண்டு பேர்கள் கொஞ்சம் சமாளித்துக் கொண்டாலும் கவுதம் கார்த்திக் இன்னும் எழுந்திருக்க முடியவில்லை. சினிமாவில் ஹீரோக்களை ரசிகர்கள் ஹீரோவாகவே பார்க்க விரும்புகிறார்கள். பிரபல நடிகர் கார்த்திக் நடிப்பால் பெயர் வாங்கினார். அதைவைத்து முன்னேறாமல் அவரது வாரிசான கவுதம் கார்த்திக் கேட்பார் பேச்சைக் கேட்டு பெயரைக் கெடுத்துக் கொண்டு மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். நடிகை யாஷிகா தனது தவறை உணர்ந்து இனி அடல்ட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று ஸ்டேட்மெண்ட்டே விட்டார்.
யார் விட்டாலும் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் விடுவதுபோல் இல்லை. இருட்றையில் முரட்டுக் குத்து படத்தின் 2ம் பாகம் எடுக்கிறேன் என்று அறிவித்துப் பல ஹீரோக்களை அணுகினார். இயக்குனரின் பேரை கேட்டதும் ஜகா வாங்கினார்கள். கடையில் நானே ஹீரோ என்று அறிவித்துப் படத்தைத் தொடங்கிவிட்டார். இரண்டாம் குத்து என்று படத்துக்கு டைட்டில் வைத்தவர் அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.அதைக்கண்டு ஷாக் ஆன ரசிகர்கள் கழுவி ஊற்றினர். ஆனால் இதைத்தான் எதிர்பார்த்தேன் என்பது போல் தற்போது படுகவர்ச்சியான இரண்டாம் போஸ்டரையும். டீஸரையும் வெளியிட்டுள்ளார். அதற்கும் ஏகத்துக்கு விமர்சனம் எழுந்திருக்கிறது. இப்படி எடுப்பதற்குப் பிட்டு படம் எடுக்கலாம் என்றளவுக்கு நெட்டீஸன்கள் இயக்குனரை கடுமையாக விளாசி இருக்கிறார்கள்.