ட்ரூ காலரை இந்தியாவில் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

அழைப்பவரை அறிந்துகொள்ள உதவும் காலர் ஐடென்டிஃபிகேஷன் செயலியான ட்ரூகாலர், தங்கள் பயனர் எண்ணிக்கையைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அலைபேசி எண்ணைக் கொண்டு அழைப்பவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ட்ரூகாலர் செயலி தற்போது குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) பிளாக் செய்வது மற்றும் டிஜிட்டல் லோன் வழங்குவது உள்ளிட்ட வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தேவையற்ற அலைபேசி அழைப்புகள் பற்றிய அதிக தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் 'ஸ்பேம் ஆக்டிவிட்டி இன்டிகேட்டர்' வசதியை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ட்ரூகாலர் வழங்குகிறது.

ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ட்ரூகாலர் நிறுவனத்தின் அலுவலகங்கள் பெங்களூரு, குரு கிராம் மற்றும் மும்பை நகரங்களிலும் அமைந்துள்ளன.அலைபேசி வழியாக நடக்கும் மோசடியைத் தடுக்க உதவும் ட்ரூகாலரை இந்தியாவில் தினமும் 15 கோடி பயனர்களும் (150 மில்லியன்), ஒரு மாதத்தில் 18 கோடியே 50 லட்சம் பயனர்களும் உபயோகிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் 20 கோடி தினசரி பயனர்களும், மாத அளவில் 25 கோடி பயனர்களும் உபயோகிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>