இந்தியாவில் இதுவரை 68 லட்சம் பேருக்கு கொரேனா பாதிப்பு.. 58 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இது வரை மூன்றரை கோடி பேருக்கு நோய் பாதித்த நிலையில், 10 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
நோய் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் 75 லட்சம் பேருக்கு தொற்று பாதித்த நிலையில், 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 50 லட்சம் பேருக்கு தொற்று பாதித்த நிலையில், ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்று புதிதாக 78,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 68 லட்சத்து 35,656 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 58 லட்சத்து 27,701 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 9 லட்சத்து 2425 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவுக்கு நேற்று மட்டும் 971 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனாவல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5,526 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 11 லட்சத்து 94,327 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இது வரை 8 கோடியே 34 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.