One side love அலப்பறைகள் !!மிஸ் பண்ணாம பாருங்க.
காதலில் சிக்காத மானிடர்கள் இந்த வையகத்தில் உண்டோ??அதுவும் ஒன் சைடு லவ்வில் விழாதவர்கள் இருக்கவே முடியாது. தனக்கு பிடிச்ச பெண்ணுக்காக ஒரு ஆண் எந்த எல்லைக்கும் செல்ல துணிவான் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரிந்த உண்மை.
அது போல இந்த சிறிய குறும்படத்தில் ஒன் சைடு காதல் பற்றி நடிகர் செல்வா மனதை உருக்கும் அளவிற்கு வசனங்களை பேசி இருக்கிறார். இவர் பேசுவதை பார்த்தால் இவரும் ஒன் சைடு லவ் பண்ணி இருப்பாரோ? 'One side love' என்ற சிறிய குறும்படம் டூமாங்கோலியின் தயாரிப்பில் எடுக்கப்பட்டவையாகும். ஒன் சைடு காதல் செய்பவர்கள் அந்த பெண்ணுக்கு என்ன பிடிக்கும் என்பதை விரல் நுனியில் வைத்து இருப்பார்கள். ஆனால் இதே படிப்பு சம்மந்தமான கேள்வியை கேட்டு பாருங்கள் வாயில் இருந்து பதில் வராது வெறும் காத்து தான் வரும்...ஒன் சைடு காதல் செய்வது எளிது.
ஆனால் அந்த காதலை பெண்ணிடம் கொண்டு சேர்ப்பதற்கு மன தைரியம் தேவை. இந்த குறும்படத்தை பார்க்கும் பொழுது ஒவ்வொருவரின் மனதில் எழுவது நம் வாழ்க்கையில் நடந்தது போல் இருக்கே என்று தான்.. இக்கதை அவ்வாறு வாழ்க்கையில் எதார்த்தமாக பொருந்தியுள்ளது. ஆகவே 'One side love' குறும்படத்தை பார்க்கும் பொழுது நமது பசுமையான காதல் கதைகள் மனதில் மலரும்....