பங்குதாரர்களுக்கு ரூ.16,000 கோடி மூலதனத்தை திருப்பித் தர டிசிஎஸ் முடிவு...!
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான டி. சி. எஸ். எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது வணிக வளர்ச்சிக்காகத் தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியைக் கையில் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக , டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தில் பவுண்டேஷன் அமைக்க உள்ளது. இது நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவிற்குப் பயனுள்ளதாகவும், பல மடங்கு வளர்ச்சி செய்யவும் ஏதுவாக இருக்கும் என டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்காக டிசிஎஸ் பல பிரிவுகளில் பல கட்டங்களாக முதலீடு செய்ய உள்ளது. இதற்காக தன் பங்குதாரர்களுக்கு மூலதனத்தைத் திருப்பித் தர டிசிஎஸ் முடிவு செய்து ரூ.16,000 கோடிக்கு தன் பங்குகளை மீண்டும் வாங்க முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுக் கூட்டத்தில் ஒரு பங்குக்கு ரூ.3000 என்ற வகையில் 5.3 கோடி பங்குகளைத் திரும்ப வாங்கத் தீர்மானிக்கப்பட்டது. டி.சிஎஸ்சின் ன மிகப் பெரிய பங்குதாரரான டாடா சன்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த நிறுவனம் டி.சி.எஸ்ஸில் 72 சதவீத பங்குகள் கொண்டுள்ளது. இந்த பங்குகளை டி.சி.எஸ்க்கு விற்பதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனம் சுமார் 11,500 கோடி ரூபாய் திரட்டும் . இந்த தொகை டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிதி கையகப்படுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனம் தற்போது ஏர் ஏசியா இந்தியாவை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏர் இந்தியாவுக்கான பங்குகளை வாங்குவது குறித்துப் பரிசீலித்து வருகின்றது. டி.சி.எஸ் நிறுவனம் ஒரு பங்குக்கு 12 ரூபாய் ஈவுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.324 கோடி கிடைக்கும்.