அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர்களுக்கு எச் 1பி விசா நடைமுறையில் மேலும் புதிய கட்டுப்பாடு...!

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர்களுக்கு 'எச் 1பி' விசா நடைமுறையில், அதிபர் டிரம்ப், மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் பணியாற்றக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு, புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கேயே தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, எச் 1பி விசாவும் அவர்களது வழக்கைத் துணைவருக்கு எச் 4 விசாவும் வழங்கப்பட்டு வருகிறது. . இந்த விசாவை பயன்படுத்தி, அமெரிக்காவில் பணியாற்றுவோரில் இந்தியர்கள் மற்றும் சீனர்களே அதிகம்.

குறிப்பாக இந்திய ஐ. டி. துறையைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் , எச் 1பி விசா பெற்று அங்கு பணியாற்றி வருகின்றனர் அமெரிக்க நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. . இதனால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர்.

சொந்த நாட்டு மக்களே வேலையின்றி இருக்கும் போது, பிற நாட்டினருக்கு எப்படி வேலை அளிக்க முடியும் என்பது அதிபர் டிரம்பின் வாதம். இதைக் கருத்தில் கொண்டு எச் 1பி விசாகக்களை வழங்க, கடந்த ஜூன் மாதம் இடைக்காலத் தடை விதித்தார். ஆனால், அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு வாரங்களே உள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகம், எச் 1பி விசா விவகாரத்தில் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.அமெரிக்கத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதும், ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதும், அவர்களுக்குப் பணி உத்தரவாதம் அளிப்பதும் இந்த அரசின் கடமையாக உள்ளது. எனவே, எச் 1பி விசா வழங்குவதில் இனி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த பணிகளில் அதிலும் நல்ல நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கு மட்டுமே, இனி,எச் 1பி விசா வழங்கப்படும்.

இதை அமெரிக்க நிறுவனங்கள் புரிந்து கொண்டு, தகுதியுடைய வெளிநாட்டினார்களுக்கு மட்டும், வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். எச் 1பி விசாவுக்கான மனு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன், விண்ணப்பித்த நபர்களின் பணி மற்றும் தகுதி குறித்து, நேரடி ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கப் பொருளாதாரத்தை உயர்த்த உதவக்கூடிய, தனிச் சிறப்பு வாய்ந்த நிபுணர்களுக்கு மட்டுமே இனி எச் 1பி விசா வழங்கப்பட வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதுநாள் வரை, குறைந்த சம்பளத்தில் ஊழியர்களை பணியமர்த்திக் கொள்ள இந்த வகை விசா பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதனால், அமெரிக்கர் நாட்டினரின் வேலைவாய்ப்புகள் பறிபோயின.வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து,பணியாற்றுபவர்களால், அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்துக்குச் சிக்கல் ஏற்பட்டது விடக் கூடாது என்பதில், அதிபர் உறுதியாக உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க விதித்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு, எனப்படும், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பான 'நாஸ்காம்'கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் காரணமாக , பல திறமையான நிபுணர்கள் அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்படும். இதுவும் , அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை உண்டாக்கும். மேலும், கொரோனா பாதிப்பு உள்ள தற்போதைய கால கட்டத்தில், பல்வேறு ஆராய்ச்சி பணிகள் தொய்வடையும். இது, அமெரிக்க நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என நாஸ்காம் அமைப்பு எச்சரித்துள்ளது.

More News >>