புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.. போஸில் அம்மாவை மிஞ்சிய குட்டி ஐலா பாப்பா!
சின்னத்திரையில் புகழ் பெற்ற ரியல் ஜோடிகள் என்றால் அது சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ஆலியா தான்.. சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் 'ராஜா ராணி' என்கிற சீரியல் ஒளிப்பரப்பாகியது. இதில் முக்கிய கதாபாத்திரமான செம்பா மற்றும் கார்த்திக்.இருவரின் ஜோடி பொருத்தம் மக்கள் மனதை மிக எளிதில் கவர்ந்ததால் சீரியலும் வெற்றிகரமாக ஓடியது.
அது மட்டும் இல்லாமல் இவர்களின் கெமிஸ்ட்ரி பற்றின பல வித பாராட்டுகள் கிடைத்தது.இந்நிலையில் ரீல் ஜோடிகளாக இருந்த இவர்களின் மனதில் காதல் பூக்கள் பூக்க தொடங்கியது. இருவரும் ஒரு மனதாக காதலித்து வந்தனர். ஆனால் ஆலியாவின் வீட்டில் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் சஞ்சீவ் வேற ஒரு சீரியலில் ஒப்பந்தமாகினார்.ஆனால் ஆலியா நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் ஆலியா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்து ஆலியா மற்றும் சஞ்சீவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இதையடுத்து ஆலியா கடந்த மார்ச் மாதம் தேவதையான பெண் குழந்தையை பெற்று எடுத்தார். இந்த சந்தோஷமான செய்தியையும் சேர்த்து தன் குழந்தையின் பெயர் ஐலா சையத் என்று சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
குழந்தை பிறந்து ஒரு மாதத்திலே குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டனர். இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இது போல புகைப்படத்தை பகிர்ந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஐலா பாப்பாவை வைத்து பிரம்மாண்டமான போட்டோ ஷூட் செய்து இருந்தனர். இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யாவும் மாபெரும் உச்சத்தில் வைரலாகியாது என்று கூறலாம்.
இதனை கண்ட ரசிகர்கள் ஐலா குட்டி மிகவும் கியூட்டாகவும் போஸ்கள் யாவும் அற்புதமாக உள்ளது என்று கூறினார். அதுமட்டும் இல்லாமல் நடிப்பில் தனது அம்மாவையே மிஞ்சி விடுவார் போல என்று என்று விமர்சித்து வருகின்றனர்.