வரம்புக்கு மீறி கடன் கொடுத்ததால் பயத்தில் பேங்க் மேனேஜர் மகளுடன் தற்கொலை
வரம்பு மீறி கடன் கொடுத்ததால் அரசு தன் மீது நடவடிக்கை எடுத்துவிடுமோ என்ற அச்சத்தில் தனது 5 வயது மகளுடன் தனியார் வங்கி மேனேஜர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி சிண்டிகேட் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி ஆவுடையம்மாள். இவர் விற்பனை பிரதினிதியாக வேலை பர்த்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் மகள் ஒருவர் பள்ளியில் படித்து வந்தார்.இந்நிலையில், ராமசுப்பிரமணியன் பல்வேறு தொழிலதிபர்களுக்கும் வரம்புக்கு மீறி கடன் கொடுத்ததாக தெரிகிறது.
ஏற்கனவே, வரம்பு மீறி கடன் வாங்கிய வழக்கில் நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் மேலாளரும், அவர்களுக்கு உதவியவர்களும் அரசிடம் சிக்கி வருகின்றனர். இதனால், எங்கு நாமும் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த ராமசுப்பிரமணியன் அவரது வீட்டில் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
கணவரும், மகளும் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் ஆவுடையம்மாளும் தற்கொலைக்கு முயன்றார். இவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, ஆவுடையம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com