தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் எப்போது? அட்டவணை அறிவித்த தேர்தல் அதிகாரி.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் அதிகாரி நீதியரசர் அறிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தால்‌ நியமிக்கப்பட்ட தோ்தல்‌ அதிகாரி நீதியரசர்‌ எம்‌.ஜெயச்சந்திரன்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க தேர்தல் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டிற்கான தேர்தலை வருகிற டிசம்பர்‌ மாதம்‌ 31ம்‌ தேதிக்குள்‌ நடத்தி முடிக்க வேண்டும்‌ என்று கடந்த 30.09.2020 அன்று சென்னை உயா்நீதிமன்றம்‌ உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்‌ அடிப்படையில்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டிற்கான தோ்தல்‌ வருகிற நவம்பர்‌ மாதம்‌ 22ம்‌ தேதி (22.11.2020-ஞாயிற்றுக் கிழமை) அன்று சென்னை அடையாறு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. ஜானகி கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி (சத்யா ஸ்டூடியோஸ்‌) வளாகத்தில்‌ நடைபெற வுள்ளது.அதற்கான அட்டவணை சங்க உறுப்பினர்களின்‌ கவனத்திற்கு தெரிவித்துக்‌ கொள்ளபடுகிறது. தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர்‌ பட்டியல்‌ 12.10.2020 காலை 11 மணி முதல்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க அலுவலகத்தில்‌ (அலுவலக வேலை நேரத்தில்‌ காலை 11 மணி முதல்‌ மாலை 6 மணி வறை) நேரில்‌ வந்து பெற்றுக்கொள்ளலாம்‌. இறுதி செய்யப்பட்ட வாக்காளர்‌ பட்டியல்‌ மற்றும்‌ தேர்தலுக்கான வேட்புமனு கொரியர்‌ மூலம்‌ பெற விரும்பும்‌ தயாரிப்பாளார்கள்‌ தங்களது முகவரியினை எழுத்துப்பூர்வமாக கடிதம்‌ கொடுத்து உரிய கட்டணத்தினை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்‌. அவர்கள்‌ அளிக்கும்‌ முகவரிக்கு இறுதி செய்யப்பட்ட வாக்காளர்‌ பட்டியல்‌ மற்றும்‌ தேர்தலுக்கான வேட்பு மனு அனுப்பி வைக்கப்படும்‌.

தேர்தல்‌ அட்டவணை:1) 15.10.2020 காலை 11 மணி முதல்‌ 23.10.2020 மாலை 3.30 மணி வரை வேட்புமனு, தாக்கலுக்கான விண்ணப்பங்கள்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க அலுவலகத்தில்‌ வழங்கப்படும்‌. (ரூ.100 செலுத்தி உறுப்பினர்கள்‌ பெற்றுக்கொள்ளலாம்‌).2) 23.10.2020 மாலை 3.30 மணிக்கு மேல்‌ விண்ணப்பங்கள்‌ வழங்கப்படமாட்டாது.3) 16,10.2020 காலை 11 மணி முதல்‌ 23.10.2020 மாலை 4 மணிக்குள்‌ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சங்க அலுவலகத்தில்‌ மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில்‌ சேர்த்துவிட வேண்டும்‌. (விண்ணப்ப படிவங்களை தபால்‌ அல்லது கொரியரில்‌ அனுப்ப விரும்பும்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ உறுப்பினர்கள் 23.10.2020 மாலை 4 மணிக்குள் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய கேட்டுக்கொள்ளப்படுகிறது.4) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள்‌ அனைத்தும்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க அலுவலகத்தில்‌ உள்ள மூடி முத்திரையிட்ட பெட்டியில்‌ 23.10.2020 மாலை 4 மணிக்கு சீல்‌ வைக்கப்படும்‌. பின்னர் மாலை 5.00 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்‌.5) 24. 10. 2020 காலை 11 மணி முதல்‌ 29.10.2020 மாலை 4 மணி வரை வேட்புமனு விண்ணப்பங்களை திரும்ப பெற்றுக்‌ கொள்ளாலம்‌. மாலை 4 மணிக்கு மேல்‌ விண்ணப்பங்களை திரும்ப பெற இயலாது.

6) 29.10.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர்‌ பட்டியல்‌ வெளியிடப்படும்‌. 30.10.2020 அன்று இறுதி வேட்பாளர்‌ பட்டியல்‌ தேர்தலில்‌ வாக்களிக்கும்‌ தகுதிபெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும்‌ தபால்‌ அல்லது கொரியர் மூலம்‌ அனுப்பி வைக்கப்படும்‌.தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டிற்கான தேர்தல் வருகிற 22.11.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8-மணி முதல்‌ மாலை 4-மணி வரை இடைவெளியின்றி சென்னை அடையாறு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. ஜானகி கலை மற்றும் அறிவியல்‌ கல்லுரி (சத்யா ஸ்டூடியோஸ்‌) வளாகத்தில்‌ நடைபெறும்‌. தேர்தலில் போடியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் வருமாறு: தலைவர்‌ பதவிக்கு -ரூபாய்‌.1,00,000/-(ரூபாய்‌ ஒரு லட்சம்‌ மட்டும்‌) மற்ற நிர்வாகிகள்‌ பதவிக்கு-ரூபாய்‌.50,000/-(ரூபாய்‌ ஐம்பதாயிரம்‌ மட்டும்‌) செயற்குழு உறுப்பினர்‌ பதவிக்கு-ரூபாய்‌.10,000/-(ரூபாய்‌ பத்தாயிரம்‌ மட்டும்‌)குறிப்பு: தேர்தலில்‌ போட்டியிட விரும்பும்‌ தயாரிப்பாளர்கள்‌ தாங்கள்‌ எந்த பதவிக்கு போட்டியிட விரும்புகிறார்களோ அந்த பதவிக்கு நிர்ணயம்‌ செய்துள்ள தொகையினை கீழ்கண்ட வங்கி கணக்கு எண்ணில்‌ நேரடியாக அனுப்பி வைக்கலாம்‌ என்று தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.A/C No. 415419873. INDIAN BANK, THOUSAN LIGHTS BRNCH, IFS:IDIB000T020Name: Tamil film Producers Councilஇவ்வாறு தேர்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News >>