டிசம்பரில் இரயில்வே துறையின் NTPC தேர்வு!

இந்திய அரசின் மிகப்பெரிய பொதுப்பணித்துறை அமைப்பு இரயில்வே துறை. இரயில்வே துறையில் 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் Non Technical Popular Category க்கான பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவித்தது. இந்த வேலைவாய்ப்பிற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர்.ஆனால் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளால் இந்த அறிவிப்புக்கான தேர்வு தேதி அறிவிக்கப்படாமலே இருந்தது.

பின்னர் இந்த ஆண்டில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் தேர்வு தொடர்பான அனைத்து செயல்களும் நிலுவையிலேயே இருந்தது.தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்ஓர் நற்செய்தியை இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி NTPC க்கான தேர்வானது வரும் டிசம்பரில் நடக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தேர்வைப் பற்றிய முழு விவரங்களும் இரயில்வே துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த போது விண்ணப்பதாரர்கள் செலுத்திய கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைத் தவிர்த்து, மீதித்தொகை திருப்பி அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பட்டியலினம் மற்றும் பழங்குடியினர், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் போன்றோர்க்கு முழு கட்டணத்திலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து ரூ.500 பெறப்பட்டது. விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து எழுத வராமல் இருப்பதால் ஏற்படும் இழப்பைத் தவிர்ப்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி விண்ணப்பிக்கும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 யை செலுத்தவேண்டும்.

பின்னர் முதல் நிலைத்தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் போன்றோர்க்கு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும். மற்ற விண்ணப்பதாரர்களுக்கு 100 விண்ணப்பக் கட்டணம் போக, ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

இந்த தேர்விற்கு ஏற்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலையை அறிவதற்கான அறிவிப்பைச் சமீபத்தில் இரயில்வே நிர்வாகம் அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்புக்கு

http://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும்.

More News >>