இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்த எரோனாட்டிக்ஸ் ஊழியர் கைது...!

இந்தியப் போர் விமானங்கள் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பிய எரோனாட்டிக்ஸ் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவில் தயாராகும் போர் விமானங்கள் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானுக்கு உளவாளி ஒருவர் அனுப்பிய தகவல் மத்திய அரசுக்குத் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து மாநில தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் அதிகாரிகள் இது குறித்து ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த ஊழியர் நாசிக் பகுதியில் உள்ள இந்துஸ்தான் எரோனாட்டிக்ஸ் ஊழியர் என்பது தெரியவந்தது.

அவர் இந்தியப் போர் விமானங்கள் குறித்த ரகசியத் தகவல்கள் அவற்றில் முக்கிய விவரங்கள் நாசிக் அருகே உள்ள ஓஜாரில் விமான உற்பத்தி பிரிவு ஏர் ஸ்பேஸ் மற்றும் உற்பத்தி பிரிவுகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்த விவரங்களை பாகிஸ்தானிய உளவுத் துறைக்கு வழங்கியதாகத் தெரிய வந்தது தொடர்ந்து பல்வேறு கட்ட ரகசிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் 41 வயதான அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என நாசிக் கேடிஎஸ் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 3 மொபைல் போன்கள் 5 சிம் கார்டுகள் 2 மெமரி கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட அந்த நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பத்து நாட்கள் ஏடிஎஸ் பிரிவில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

More News >>