சர்க்கரை நோய், குடற்புழு பிரச்சனையைக் குணப்படுத்த இந்தக் காயைச் சாப்பிடுங்கள்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விளையும் மருத்துவ குணம் கொண்ட காய்களுள் ஒன்று அதலைக்காய் ஆகும். கரிசல் மண் நிறைந்த பூமியில் எள், சோளம், மக்காச்சோளம் போன்ற பயிர்களுடன் அதலைக்காய் விளைகிறது. பூமியில் கிழங்கு வடிவில் இருக்கும் இவை மழைக்காலம் தொடங்கியதும், கொடியாகப் படரும். பாகற்காய் போன்று கசப்பு தன்மை கொண்டது அதலைக்காய். இவற்றைத் தனியாகப் பயிரிட முடியாது. தானாகவே கரிசல் காட்டில் தாமாகவே வளரும். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் விளைகிறது.

சத்துகள்

நீர்ச்சத்து 84.3 சதவீதம், நார்ச்சத்து 6.42 சதவீதம், பீட்டா கரோட்டின் 0.01 சதவீதம், புரதம் 2.15 சதவீதம், கார்போஹைடிரேடு 12.6 சதவீதமும் 100 கிராம் அதலைக்காயில் 3 கிலோ கலோரி ஆற்றல், சுண்ணாம்பு சத்து 72 மில்லி கிராம், சோடியம் 40 மில்லி கிராம், பொட்டாசியம் 500 மில்லி கிராம், இரும்புச் சத்து 1.7 மில்லி கிராம், துத்தநாகம் (ஸிங்க்) 2.82 மில்லி கிராம், மாங்கனீஸ் 0.32 மில்லி கிராம், செம்பு (காப்பர்) 0.18 மில்லி கிராம், பாஸ்பரஸ் 0.46 மில்லி கிராம், வைட்டமின் சி 290 மில்லி கிராமும் உள்ளது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலைக்கு அதலைக்காய் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயைத் தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

உடல் எரிச்சல்

உடல் எரிச்சல் உள்ளவர்கள் தினந்தோறும் அதலைக்காயை சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.

குடற்புழு

அதலைக்காய் வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறதுமலச்சிக்கல், அஜீரணம், வயிற்றுப்போக்கு, முடக்குவாதம் இவற்றுக்கான சிகிச்சையிலும் இது பயன்படுத்தப்படுகிறது.அதலைக்காயை மற்ற காய் மாதிரி நறுக்கிச் சமைக்க முடியாது. அப்படியே தான் சமைக்க வேண்டும். அதலைக்காயை பறித்த உடன் உடனடியாக சமைத்துவிட வேண்டும். பிஞ்சு அதலைக்காய்களை விரும்பி உண்கின்றனர்.

அதலைக்காயை நன்கு அலசி, அளவாகத் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி பக்குவமாக ஒரே கொதியில் இறக்கி வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்துக் கறிவேப்பிலை இட்டுப் பொரித்து, பொடியாக நறுக்கிய வெங்காயமும், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாயும் இட்டு நான்கைந்து முறை கிளறி விட்டு அடுப்பை அணைத்து வாணலியைத் தட்டுப் போட்டு மூடி விடவேண்டும். பிறகு சூடான சாதத்தில் கெட்டிப் பருப்பும் நெய்யும் விட்டுப் பிசைந்து கூட்டுக்கு அதலைக்காய்ப் பொரியலையும் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

More News >>