64வது படம் இயக்க விஜய் முதலில் தேர்வு செய்த இயக்குனர் யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இது விஜய்யின் 64வது படமாக உருவாகி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார், இப்படம் முடிவடைந்தும் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடிய நிலையில் ரிலீஸ் ஆகாமலிருக்கிறது.கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய் கதை தேர்வு மற்றும் இயக்குனர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அட்லீயுடன் 'பிகில்' படத்தில் நடித்தார். இது கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பும் பெற்றது.

'பிகில்' படத்திற்கான வேலைகளை முடித்த பின்னர், இயக்குனர் மகிழ் திருமேனி சொன்ன கதைக் களத்தால் விஜய் மிகவும் ஈர்க்கப்பட்டார், மேலும் தனது 64வது படத்தில் அவரது இயக்கத்தில் நடிக்க எண்ணி இருந்தார். அதே நேரத்தில், மற்றொரு பிரபல நடிகர் நடிக்கும் படத்தை இயக்க மகிழ்திருமேனி கையெழுத்திட்டார். இதையடுத்து விஜய் அவரது இயக்கத்தில் நடிக்க ஒத்துழைக்க முடியவில்லை, பின்னர் லோகேஷ் கனகராஜுக்குத் தனது 64வது படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார். இவர் கார்த்தி நடித்த கைதி படத்தை அளித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டார்.லோகேஷ் கனகராஜுடன் விஜய் படத்திற்கு 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தீபாவளி அல்லது பொங்கல் நாளில் தியேட்டர்கள் முழு அளவில் திறந்ததும் இப்படம் வெளியாக உள்ளது.

விஜய் பட வாய்ப்பு கிடைத்தும் அதை மகிழ் திருமேனி நழுவ விட்டுவிட்டார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தின் பணியும் இன்னும் தொடங்கவில்லை. எதிர்காலத்தில் விஜய்யுடன் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர்களை வழங்குவதில் மகிழ் திருமேனி கைதேர்ந்தவர் , மேலும் அவரது இயக்கத்தில் வெளியான 'தடையர தாகா', 'மீகாமன்' மற்றும் 'தடம்' ஆகிய படங்கள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், விஜய் அடுத்து தனது 65வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்க்க இருப்பதாகத் தகவல் வெளியானது. பரபரப்பாக எதிர்ப் பார்த்த நிலையில் இன்னமும் விஜய் முருகதாஸ் பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

More News >>