அரசு பணிகளில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு 32 ஆக உயர்வு !

தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது,தமிழக அரசில் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு நேரடியாக பணிநியமனம் செய்யப்படுகிறது.இந்தப் பணிகளில் சேர விரும்புவோருக்குக் குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி.க்கு கூடுதலான கல்வி இருக்கக்கூடாது.

இந்தப் பணிகளில் சேரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோருக்கு வயது உச்சவரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த வகுப்பினருக்கான வயது உச்சவரம்பு 32 ஆகத் திருத்தி ஆணையிடப்படுகிறது எனச் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

More News >>