சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெயர்கள் திடீர் மாற்றம்...!

சென்னை சில மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன அரசு இதற்கு முறையான அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூரை அடுத்து உள்ள விம்கோ நகா் வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கத் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

இதில் 90 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. வரும் டிசம்பரில் இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அவரது அனுமதி கிடைத்ததும் இந்த வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்.இந்த நிலையில், 8 மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன.

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தின் பெயர் இனி தண்டையார்பேட்டை என்று மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தின் பெயா் புது வண்ணாரப்பேட்டை என்றும், தாங்கல் ரயில் நிலையம் காலடிப்பேட்டை என்றும், கௌரி ஆசிரமம் ரயில் நிலையத்தின் பெயா் திருவொற்றியூா் தேரடி என்றும் மாற்றப்பட்டுள்ளது.இதற்கு அரசும் முறையாக அனுமதி அளித்துள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More News >>