தனக்கென புதிதாய் மொபைல் ஆப் வெளியிட்ட தீரன் நாயகி!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனக்கென புதிதாக ஒரு மொபைல் ஆப் உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வசூல் ஹிட் படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்து டாப் நடிகையர் லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். நடிகைகளில் புது முயற்சியாக புதிதாகத் தனக்கென புதியதொரு மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத்.
இதுகுறித்து நடிகை ரகுல் கூறுகையில், "அமெரிக்க நிறுவனம் ஒன்றுதான் இந்த ஆப் திட்டத்தை எனக்கு அறிமுகப்படுத்தினர். முதலில் தயங்கினேன். பின்னர் அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க முடியும் என்பதை அறிந்து சம்மதித்தேன்.
இன்று பிரபலமான நடிகையாக நான் இருக்கலாம். இந்த வெற்றிக்கு முழு உதவி புரிந்தது எனது தோல்விகள்தான். வாழ்க்கையில் வெற்றியைவிட தோல்விகள்தான் அதிகப் பாடங்களைக் கற்றுத்தரும்" என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com