ஆப்பிள் நிறுவன பாதுகாப்பில் ஓட்டை: லட்சக்கணக்கான டாலர்கள் வாங்கிய ஹாக்கர்கள்...!

தனிப்பட்ட மின்னஞ்சல்கள், ஐகிளவுட் தரவு மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை எடுக்கக்கூடிய அளவில் ஆப்பிள் உள்கட்டமைப்பில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்த ஹாக்கர்களுக்கு அந்நிறுவனம் பெருந்தொகையை வழங்கியுள்ளது.சாதாரண குறைபாடுகள் 2, நடுத்தர அளவிலான குறைபாடுகள் 13, உயர் பாதுகாப்பு குறைபாடுகள் 29, தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் 11 என்று மொத்தம் 55 குறைபாடுகளை (bugs) கண்டறிந்த சாம் குர்ரி என்ற இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட குழுவினருக்கு ஆப்பிள் நிறுவனம் இதுவரை 2 லட்சத்து 88 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.

சமீபத்தில் ஆப்பிள் பயனர் கணக்கில் உள்நுழைவதில் உள்ள தயாரிப்பு குறைபாட்டை பாவுக் ஜெயின் என்ற இந்திய இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு ஆப்பிள் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை (ஏறத்தாழ 75 லட்சம் ரூபாய்) வழங்கியது. இதை அறிந்த சாம் குர்ரி தலைமையிலான இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவினர் ஆப்பிள் நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பில் பல்வேறு குறைகளைக் கண்டுபிடித்தது.

ஆப்பிள் நிறுவனம் அக்குறைபாடுகளைச் சரி செய்யவில்லையென்றால் அதன் இயக்கத்தையே ஹாக்கர்கள் கட்டுப்படுத்தக்கூடிய நிலை இருந்தது. தற்போது அக்குறைபாடுகள் அனைத்தையும் ஆப்பிள் நிறுவனம் சரி செய்துள்ளது.

More News >>