நடுத்தெருவில் படுக்கையை போட்ட இயக்குனர் மன்னிப்பு கேட்டார்.
கவுதம் கார்த்திக் நடித்த இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். அடல்ட் காமெடியாக உருவான இப்படத்தைத் தொடர்ந்து சில வருட இடை வெளியில் இரண்டாம் குத்து; என்ற படத்தை இயக்குகிறார். இது இருட்டறையில் முரட்டு முத்து படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது.
இரண்டாம் குத்து படத்தின் பார்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை ஆபாசமாக வெளியிட்டார் சந்தோஷ் செயகுமார். அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தினம் இப்படத்தின் மற்றொரு போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிட்டார். அதுவும் ஆபாசத்தின் உச்சமாக இருந்தது. இதற்கு இயக்குனர் பாரதிராஜா படுக்கையை நடுத்தெருவில் வைத்த இயக்குனர் என கடும் கண்டனம் தெரிவித்தார். அதில், சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது. உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப் பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரண மல்ல. பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.
சினிமா வியாபாரமும்தான். ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக்கேவலமான பதிவோடு பொது மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்ப வான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்? சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? "இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக் கவா முன்வந்தோம்? இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப் பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.. எத்தனை கற்பழிப்புகள்...? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்து கொள்ளுங்கள் என்று பாரதிராஜா கூறியிருந்தார்.
பாரதிராஜாவின் கண்டனத்தை பொருட்டாக மதிக்காமல் அவர் இயக்கிய டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை வெளி யிட்ட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் இதை பார்த்து கண் கூசவில்லையா என்று கேட்டிருந்தார். அதில் அப்பட ஹீரோயின்கள் நீச்சல் உடை யில் கமல் அருகில் நிற்பது போல் போஸ் தந்திருந்தனர். பாரதிராஜாவை எதிர்கேள்வி கேட்ட சந்தோஷ் பி ஜெய குமார் மீது நெட்டீஸ ன்கள் கடும் தாக்குதல் நடத்தினர். முதலில் பாரதிராஜா எடுத்த மண்வாசனை போன்ற ஒரு படம் எடு பார்க்கலாம் என்றனர். மேலும் சந்தோஷ் மீது பனங்காட்டு படை கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. எதிர்ப்பு கடுமையாக கிளம்பியதை கண்டு பயந்த இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்குனர் பாரதிராஜாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதில்,இரண்டாம் குத்து படத்தை இயக்கி நடித்துள்ளேன் அதன் போஸ்டர் டீஸருக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கனத்தின் வெப்பத்தில் எனது டிவிட்டர் பதிவில் ஒரு டிவிட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்கு பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்கக்கூடாது என்று மனம் கூறியது. ஆகவே நான் போட்ட டிவிட்டிற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் பாரதிராஜா அவர்கள் அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்துவிடமாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குனர்களுக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் வழிகாட்டியாக இருக்கிறார். எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்று இருக்கக் கூடாது. இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு சந்தோஷ் பி.ஜெயகுமார் கூறி உள்ளார்.