2018-ம் ஆண்டு தனுஷ் மயமாகி உள்ளது! தொடர் ரிலீஸ்களால் ரசிகர்கள் குஷி!

நடிகர் தனுஷ்-க்கு 2018-ம் ஆண்டு மிகவும் நெருக்கமான ஆண்டாகவே அமைய உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில்ல் நடிகர் தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாத தொடக்கத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. விரைவில் வெற்றிமாறந் தனுஷ் கூட்டணி மிக்கபெரும் மூன்றாம் வெற்றியை பதிவு செய்யும் என வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

மேலும், தொடர்ச்சியாக இயக்குநர் பாலாஜி மோகனின் 'மாரி-2' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதன் பின்னர் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரே ஒரு பாடலில் தமிழ் ரசிகர்களைக் கட்டிவைத்த 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' திரைப்படத்தின் ரிலீஸும் தனுஷ் பட்டியலில் தயாராக உள்ளது.

இத்திரைப்படங்களைவிட மிக முக்கியமான திரைப்படமாக தனுஷின் கரியரில் அமையவுள்ளது விரைவில் வெளியாக இருக்கும் தனுஷின் ஹாலிவுட் திரைப்படம். 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து முடித்துள்ள நிலையில் இந்த ஆண்டே அப்படமும் திரைக்கு வந்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்யவுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>