பிரம்மாண்ட இயக்குனரின் அடுத்த படம் ldquoஆர்ஆர்ஆர்rdquo (வீடியோ)
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக இயக்க இருக்கும் “ஆர்ஆர்ஆர்” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் ராஜமொளலி, யாரும் இதுவரையில் திரையில் பார்த்திராத புதிய அனுபவங்களை அவரது படங்களின் மூலம் விருந்தாக அளித்து வருகிறார். நான் ஈ, பாகுபாலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. குறிப்பாக, பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட பாகுபலியும் பாகுபலி 2ம் வெளியான அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில், ராஜமௌலி தனது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராஜமௌலி இயக்கும் இந்த படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கின்றனர். டிவிவி எண்டெர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் ஆகியோரது பெயரின் முதல் எழுத்து ஆர் என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதால், இந்த படத்திற்கு “ஆர்ஆர்ஆர்” என்று தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com