பீர் குளியல் வீடியோவால் பிக்பாஸ் 4 போட்டியாளருக்கு நெருக்கடி.
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தங்களின் சொந்த கதைகளை ரொம்பவே உருக்கமாக பில்டப் செய்து சொன்னார்கள். ஒவ்வொருவரின் கதையும் கண்ணீர் வரவழைத்தது. அதிலும் குறிப்பாக பாலாஜி முருகதாஸ் ஒரு கதை சொன்னார். தன்னை பெற்றதோடு சரி அதன்பிறகு என் பெற்றோர் என்னை வளர்க்க முறையாக கவனம் செலுத்தவில்லை. அவர்கள் குடிப்பார்கள் என்று ஏகத்துக்கு சோகத்துக்கு மேல் சோகமாக தான் வளர்ந்த கதையை அடுக்கிக்கொண்டே போனார். அதைக்கேட்டு போட்டியாளர்கள் அவர் மீது பரிதாபம் காட்டினார்கள். சிலர் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்கள்.
நெட்டிஸன்களும் பாலாஜிக்காக அனுதாபம் காட்டினார்கள். தற்போது அவர் பில்டப் கொடுத்துச் சொன்ன விஷயங்களை நெட்டிசன்கள் நோண்டி நுங்கெடுத்து வருகின்றனர்.பாலாஜி முருகதாஸ் ஸ்டார் ஓட்டல் நீச்சல் குளத்தில் பீர் பாட்டிலை திறந்து அதை தலையில் ஊற்றி குளிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இது பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பெற்றோர் மீது குறை சொன்னவர் பீர் குளியல் போடுகிறார் இவரா ஏழையின் மகன், குடிகார பெற்றோரின் மகன். பாவம்ல. என அதிரடியாக கமெடன்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த கமெட்ன்ஸெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் அடைந்திருக்கும் பாலாஜிக்கு எங்கு தெரியப்போகிறது வெளியில் வரும்போது அவரது சாயம் வெளுத்துப்போனது தெரியும் என்றும் சிலர் நக்கலடித்திருக்கின்றனர்.