கீழடி அகழாய்வு பணிகள் : உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஆய்வு.

கீழடியில் 6 வது கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் அகழாய்வு தளத்தை பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 19 ல் தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி முடிவடைந்தது. அங்கு 20 வதாக தோண்டப்பட்ட குழியில் இரண்டு அடுக்குகள் கொண்ட உறைகிணறு இருந்தது கண்டறியப்பட்டது. செப்டம்பர் 30 வரையிலான அகழாய்வு முடிவில் 16 அடுக்குகள் வரை கண்டறியப்பட்டது. அதன்பின் பணிகள் நடந்து வந்த வேளையில் தற்போது 38 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளது. சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகள் மூலம் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் சுமார் 20 முதல் 25 செமீ உயரம் கொண்டவையாக உள்ளன. ஒருசில அடுக்குகள் சேதமடைந்துள்ளன. கீழடியில் இதுவரை நடந்த அகழாய்வில் 8 முதல் 12 அடுக்குகள் வரையிலான உறைகிணறுகள் மட்டுமே கண்டறியப்பட்டன. 6 வது கட்ட அகழாய்வில் அகரத்தில் 26 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது .

தொல்லியல் துறை சார்பில் அகரத்தில் கண்டறியப்பட்ட (26 அடுக்குகள்) உறை கிணறு தமிழகத்தின் 2 வது பெரிய உறைகிணறு என கூறப்பட்டது. தமிழகத்தில் திருவள்ளுர் மாவட்டம் பட்டரைபெரும்புது£ர் என்ற இடத்தில் 28 அடுக்குகளுடன் வெளிப்பட்ட உறைகிணறுதான் தமிழகத்தின் பெரிய உறைகிணறு என அறியப்பட்டுள்ள நிலையில் அதனை மிஞ்சும் வகையில் 32 அடுக்குகளுடன் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் பெரிய உறைகிணறு கீழடியில் என பெயர் பெற்றுள்ளது. கீழடியில் 20 குழிகள் தோண்டப்பட்டு ஆயிரதது 400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்பு கூடுகளும், அகரத்தில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு ஆயிரத்து 20 பொருட்களும், மணலுரில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு 39 பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை குழந்தைகளின் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், இணைப்பு பானைகள், பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானைகள், தரைதளம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் 38 அடுக்கு வரை உறைகிணறு வெளிப்பட்டுள்ளது. இந்த பணிகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் ஆய்வு செய்தார். தொல்லியல் அலுவலர் ஆசை தம்பி அகழாய்வு தளத் திதல் கண்டறியப்பட்ட பொருட்கள் குறித்து நீதிபதிக்கு விளக்கமளித்தார் ,

More News >>