ரேஷனில் பொருட்கள் வாங்க கைரேகை வேண்டாம் : தமிழக அரசு திடீர் உத்தரவு.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டுவரும் நிலையில், பயோ மெட்ரிக் கருவி கள் சரிவர இயங்காததால் ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கைரேகை அவசியம் இல்லை என தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிரதுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த திட்டத்தை அமல்படுத்த வசதியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக, பயோ மெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்கள், கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. வருகிறது. ஆனால், பல இடங்களில் இந்த இயந்திரம் சர்வருடன் இணைப்பு கிடைக்காததால் சரிவர வேலை செய்யவில்லை. . இதனால்பலர் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அனைத்து கூட்டுறவு, மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் திடீரென ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக பொருட்கள் வழங்காமல் இருக்கக் கூடாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகளை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும் என்று அரசு ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் , "ரேஷன் பொருட்கள் வழங்க கைவிரல் ரேகை அங்கீகாரம் முதல் நிலையாகும். அடுத்து ஸ்கேன் முறையில் கொடுக்கலாம். அது முடியாதபட்சத்தில், ஆதார் (ஓடிபி) முறை, ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் முறை, பதிவு செய்த செல்போனுக்கு ஓடிபி அனுப்பும் முறை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஸ்கேன் செய்யும் முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்” என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News >>