காலில் விழச்சென்ற காம்ப்ளி...தடுத்து கட்டியணைத்த சச்சின்!

கிரிக்கெட் விழா ஒன்றில் சச்சின் காலில் விழச்சென்ற காம்ப்ளியை தடுத்து சச்சின் கட்டியணைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கிரிக்கெட்டின் கடவுளாக மதிக்கப்படுபவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சச்சின் டெண்டுல்கரும் காம்ப்ளியும் 1988-ம் ஆண்டு நடந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலிருந்து தங்களது நட்புப் பயணத்தைத் தொடர்ந்தவர்கள். சாதனைகளில் ஒன்றாகத் தொடங்கியதிலிருந்து வேதனைகளில் ஊரறிய சண்டை போட்டது வரையில் இந்த நண்பர்களின் கதை மிகப் பெரியது.

சமீபத்தில் மும்பையில் உள்ளூர் அணிகளுக்கான கிரிக்கெட் பிரீமியர் லீக் தொடர்கள் நடைபெற்று வந்தன. இந்த இறுதிப்போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் சச்சின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இந்தப் போட்டித் தொடரில் இரண்டாம் பரிசு வாங்கிய அணியை கோச் ஆக இருந்து வழிநடத்தியவர் காம்ப்ளி. பரிசு பெறும் போது சச்சின் காலில் காம்ப்ளி விழப்போக அவரத் தடுத்த சச்சின் காம்ப்ளியைக் கட்டியணைத்து வாழ்த்தினார்.

இந்தப் புகைப்படத்துடன் கூடிய வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ஹிட் அடித்து வருகிறது. 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>