ராஜமவுலி பட கதையில் திடீர் மாற்றத்தால் பரபரப்பு.. என்ன நடந்தது?
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ஆந்திராவில் அந்த காலத்தில் இந்திய சுதந்திரத்துக்காக போராடிய கோமரம் பீம் மற்றும் அல்லுரி சீதாரா மையா ராஜூ ஆகியோர் வெள்ளையர்களை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய சரித்திர சம்பவத்தை தழுவி எடுக்கப்படுவதாகவும், இது சுதந்திர போராட்ட கால கட்டத்தில் நடக்கும் கதை என்றும் கூறப்பட்டது. இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். மேலும் அஜய் தேவ்கன் அலியா பட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டது. மேலும் பட இயக்குனர் ராஜ மவுலிக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து மீண்டார்.
ராஜமவுலிக்கு நேற்று பிறந்த தினம் இதையொட்டி படக்குழு, ஆர் ஆர் ஆர் படத்தின் லோகோ ஒன்றை வெளியிட்டது. அதில் இரண்டு பேர் தங்களின் கைகளை பற்றிக் கொண்டிருப்பதுபோல் சின்னம் அமைக்கப்பட்டிருந்தது. இதே சின்னம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட போதும் அச்சிடப்பட்டிருந்தது. படம் பற்றி சிறு குறிப்பை தற்போது வெளியிட்ட லோகோவுடன் வெளியிட்டிருக்கின்றனர். இந்த லோகோவில் கைகோர்த் திருப்பது ராம் சரண், ஜூனியர் என்டிஆர் கைகள்தான். ஆனால் இப்படத்தில் அவர்கள் இருவரும் சுதந்திரத்துக்காக போராடும் காட்சி எதுவும் கிடையாது. இன்னும் சொல் லப்போனால் இது சுதந்திரத்தை பற்றிய கதை இல்லை. இதுமுழுக்கு ஒரு கற்பனை கதை என குறிப்பிடப்பட்டிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திர போராட்ட கதை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இது கற்பனை கதை என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் கதையில் மாற்றம், செய்யப்பட்டிருபதாக பேசு எழுந்துள்ளது. மேலும் குறிப்பிட்ட 2 பேரின் சுதந்திர போராட்ட கதையாக இப்படத்தை உருவாக்க கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்பிறகு கதைக்களம் மாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது.