நில அபகரிப்பை தடுக்க மத்திய அரசின் ஸ்வமித்கா திட்டம் !

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏபர்ல 24 ம் தேதி, ஸ்வமித்வா என்ற திட்டத்தை பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் நிலம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு "சொத்து அட்டை" வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒரு குறிபிட்ட நபரை சொத்தின் உரிமையாளர் என அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த சொத்து அட்டைகளை பயன்படுத்தி, கிராம மக்கள் வங்கிகளில் கடன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 6.62 இலட்சம் கிராமங்கள் உள்ளன. தற்போது முதல்கட்டமாக, இந்த திட்டம் உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்திரகாண்ட் மற்றும் அரியானா உள்ளிட்ட ஆறு மாநிலத்தில் உள்ள 763 கிராமங்களில் வசிக்கும் 1.32 இலட்சம் மக்களுக்கு "சொத்து அட்டை" வழங்கப்படும் திட்டம் இன்று பிரதமரால் கானொளி காட்சியின் மூலம் தொட்ங்கப்பட்டது.

மேலும் பிரதமர் கூறியதாவது "உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே சொத்து விவரங்களை சரியாக ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். இப்போது கிராமப்புற இந்திய மக்களிடமும் அவை இருக்கும் " என்றார்.

More News >>